-
ரோஜா பொடி, முல்தானி மட்டி பொடி, ஆரஞ்சு தோல் பொடி, பூலாங்கிழங்கு பொடி மற்றும் பச்சைப்பயறு பொடி தலா 1 டீஸ்பூன் எடுத்து நன்கு கலக்கவும். பின்னர் தேவையான அளவு பச்சை பால்(Raw Milk) சேர்த்து மென்மையான பேஸ்ட் பதத்திற்கு தயாரிக்கவும். முகத்தில் சமமாகப் பூசி 10–15 நிமிடங்கள் அல்லது பேக் முழுவதுமாக காய்வதற்கு முன் கழுவவும். பின்னர் சாதாரண நீரில் முகத்தை சுத்தம் செய்யவும். மாதத்திற்கு 2–3 முறை பயன்படுத்தலாம்.
குறிப்பு: ஃபேஸ் பேக் முழுவதுமாக உலர விடாமல் கழுவுவது சருமத்தின் இயற்கை ஈரப்பதத்தை பாதுகாக்க உதவும்.